ஆத்திசூடி - இயல்வது கரவேல்


ஆத்திசூடி - இயல்வது கரவேல் 

உன் வீட்டில் ஒரு பொருள் இருக்கிறது. அதை ஒருவர் கேட்கிறார். அதை நீ ஒளிக்காமல் கொடுக்கலாம்.  ஆனால், அதைக் கொடுக்க விரும்பாமல் இல்லை என்றும் சொல்லி விடலாம். வறுமையால் வாடி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லக்கூடாது ஒளிக்காமல் கொடுக்க வேண்டும். ஆகையால் உன்னால் கொடுக்க முடிந்த பொருளை யாசிப்பவர்களுக்கு ஒளிக்காமல் கொடு.

ஆத்திசூடி - ஆறுவது சினம்


சினம் என்றால் கோபம் கோபம். நெருப்பு போன்றது. நெருப்பு என்ன செய்யும்? தன்னிடம் சேர்ந்த பொருளைச் சுடும். எரித்து அழிக்கும். கோபமும் அப்படித்தான். அது கொண்டவரைச் சுடும். அழிக்கும். ஆகையால், கோபம் வந்தால் அது ஆற வேண்டும். அதாவது, தணியவேண்டும். ஆகவே, தணிய வேண்டுவது கோபமாம்.

Sunday 2 September 2018

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எளிமையான முறையில் கணக்குகளை விளையாட்டாக கற்றுக்கொடுக்கும் ஒரு இணையதளம்


மழலைக் கல்வி வகுப்புகள் மற்றும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிமையான முறையில் கணக்குகளை விளையாட்டாக சொல்லிக் கொடுக்கும் ஒரு இணையதளம் இருக்கிறது.

 இந்த இணையதளத்தில்  மழலைக் கல்வி வகுப்பு குழந்தைகளுக்கு புள்ளி எண்ணிக்கை நீளம் கொட்டை போன்றவைகளை அறிந்து கொள்ளும் சில கணக்குகள் மழலை கல்வி வகுப்பு குழந்தைகளுக்கு வடிவங்கள் விடுபட்ட எண்கள் போன்றவைகளை கண்டறியும் சில கணக்குகள் முதல் வகுப்பிற்கு நாணய எண்ணிக்கை எழுத்து சேர்க்கை போன்ற சில கணக்குகள்

இரண்டாம் வகுப்பிற்கு மணி பார்த்தல் பின்னங்கள் போன்ற சில கணக்குகள் மூன்றாம் வகுப்பிற்கு பெருக்கல் வழிமுறை பற்றி அடிப்படையான பதின்ம பின்னம் கூட்டல் போன்ற சில கணக்குகள் நான்காம் வகுப்பு கலப்பு எண்களின் கூட்டல் வாய்ப்பு எண்கள் கணக்கிடுதல் போன்ற சில கணக்குகள் ஐந்தாம் வகுப்பிற்கு பின்னல் பெருக்கல் விழுக்காடு கண்டறிதல் பரப்பளவு போன்ற சில கணக்குகள்

ஆறாம் வகுப்பிற்கு மாறுபட்ட தோற்றங்கள் மடிப்பு அல்லது அடுக்குகள் போன்ற சில கணக்குகள் ஏழாம் வகுப்பிற்கு பித்தேகோரசு தேற்றம் தொடர்புகள் போன்ற சில கணக்குகள் எட்டாம் வகுப்பிற்கு சமன்பாடுகள்  மூன்றாம் வேர்மூலம் போன்ற பலவிதமான கணக்குகள் எளிமையான முறையில் தனிப்பட்ட தலைப்புகளில் பயிற்சி கணக்குகளை தரப்பட்டிருக்கின்றன

Click Here

https://in.ixl.com

ஆத்திசூடி- அறம் செய விரும்பு


 ஆத்திசூடி

1. அறம் செய விரும்பு

 அறம் என்றால் தருமம்.  ஏழைகளுக்குச் சோறு கொடுப்பது தருமம். கட்டிக்கொள்ளத் துணி கொடுப்பது தர்மம். இப்படித் தருமம் செய்தால் ஏழைகளின் துன்பம் நீங்கும். உன் மனத்தில் இன்பம் பொங்கும். ஆகையால், உன்னால் முடித்தவரையில் அறத்தைத் செய்ய ஆசைப்படு.